Monday 22 July 2013

தி்ண்டுக்கல் ஐ லியோனி

தி்ண்டுக்கல் ஐ லியோனி
திண்டுக்கல்
தந்தை - இஞ்ஞாசி
திண்டுக்கல் புனித மரியன்னைப் பள்ளி, மாணவர்
அங்கேயே இயற்பியல்  ஆசிரியர்.திருச்சி புனித வளனார் கல்லுாரியில் பட்டமேற்படிப்பு பயி்ன்றவர்.
பேச்சாளர்
பட்டிமன்ற நடுவர்
த.மு.எ.சங்கம் வெளியிட்ட ஒலி நாடாக்களின் மூலம் பிரபலமானவர்
தி.மு.க ஆதரவாளர்
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் முக்கியப் பங்கு வகிப்பவர்
கங்கா காவேரி என்ற படத்திலும் நடித்தவர்
பல வெளிநாடுகளிலும் பட்டிமன்ற நிகழ்ச்சிகளை நடத்தியவர்

Sunday 21 July 2013

பாக்கியம் இராமசாமி

பாக்கியம் இராமசாமி
உண்மைப் பெயர் - ஜ.ரா.சுந்தரேசன்
தாய்தந்தை பெயரை இணைத்து வைத்துக் கொண்டவர்
சேலம்  மாவட்டம் ஜலகண்டபுரம் சொந்த ஊர்
அப்புசாமி சீதாப்பாட்டி பாத்திரங்களைப் படைத்தவர் (மதல் கதை குமுதத்தில் 1963 இல் வெளிவந்தது.
வாழ்க்கைத்துணை எஸ் விஜயலட்சுமி
புனைப்பெயர்கள் யோகேஷ், வனமாலி, செல்வமணி, மிருணாளினி, சிவதணல், ஜ்வாலாமாலினி
ஞானபாரதி' 'எழுத்துச் செம்மல்'
3 மகன்கள்
பிறந்த தேதி 01.06.1932

Saturday 20 July 2013

விவரங்கள் தேவை
இவர்களைப் பற்றிய விவரங்கள் தேவைப்படுகின்றன. அறிந்தவர்கள் அளிக்கலாம்
உ.இராஜாஜி -நுாலகர்
வெ.சீதாராமன் - மருத்துவர்
குட்டி மு. வெங்கடேசன்
ஸ்வீட் ரவி
சிக்ஸ்முகம்
சாரதிடேச்சு
பர்வீன் யூனுஸ்
ஜெயாப்ரியன்
ப.கோபுராஜ் - மருத்துவர்


Wednesday 10 July 2013

எஸ். சடையப்பன்

திண்டுக்கல்லை அடுத்த காளனம்பட்டி என்ற கிராமத்துக்காரர்.
அங்கிங்கு பள்ளியில் ஆசிரியப் பணி(தற்போது உதவித் தலைமை ஆசிரியர் )
நேர்காணல்கள், கட்டுரைகள் நிறைய எழுதியவர்.
தற்போது நகைச்சுவை பக்கம் திரும்பி இருக்கிறார்.
மனைவி , இரு மகன்கள் பெயரிலும் எழுதுகிறார்

அதிரை புகாரி

நீண்ட காலமாகக் கேள்விப்பட்ட பெயர்

Tuesday 9 July 2013

சுதர்ஸன்

ஓவியர் சுதர்ஸன்
தாமே தமது துணுக்குகளுக்குப் படம் வரைந்து அளிப்பவர்
பல பத்திரிகைகளின் ஆஸ்தானப் படைப்பாளி.
வசனமே இல்லாமல் சிரிப்பை வரவழைப்பதில் வல்லவர்

Sunday 7 July 2013

எஸ்.எஸ்.பூங்கதிர்

திருவெண்ணெய்நல்லுார்
மருத்துவத் துறைப் பணி
தற்போது பாக்யா இதழில் படைத்துக் கொண்டுள்ளார்

ஜார்ஜ் சாந்தகுமார்

திருவண்ணாமலைக்காரர்
சென்னையில் வசிக்கிறார்
டேனிஷ் மிஷன் பள்ளி, திருவண்ணாமலை
ஊரிஸ் கல்லுாரி வேலுார்
சென்னை கிறித்தவக் கல்லுாரி வேதியியல்
வங்கிப் பணி

Edaiyur Sivamathy and Keezhai A.Kathirvel


Saturday 6 July 2013

வந்தை பா.ஜெயக்குமார்

வந்தவாசியில் மருந்துக் கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தவர்.
பிரபல  இதழ்களில் நிறைய எழுதி இருக்கிறார்.

தஞ்சை சுபா

சீர்காழி வி.ரேவதியின் புதல்வி

சீர்காழி வி.ரேவதி

இயற்பெயர் வாசுதேவன்
வங்கி அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்
குமுதம் முதலிய பத்திரிகைகளில் ஏராளமாய் எழுதி இருக்கிறார்.

கரடிகுளம் ஜெயபாரதி பிரியா

பாரதி என்ற உண்மைப் பெயர்க்காரர்.
மனைவி மற்றும் மகள் பெயர்களையும் இணைத்துக் கொண்ட பிரபல நகைச்சுவையாளர். கவிஞர்.
திருத்துறைப்பூண்டியில் வங்கிப் பணியாற்றியவர்.
எடையூர் சிவமதி, கீழை ஆ.கதிர்வேல் ஆகியோரின் நண்பர்.
இவரது புதல்வி மருத்துவப் படிப்புப் படிப்பதாகத் தெரிகிறது. தற்போது இட மாறுதல் காரணமாகச் சென்னை சென்றிருப்பதாகவும் கேள்விப்படுகிறோம்.

பிறந்த தேதி 22 மே 1957
ஊர்  திருநெல்வேலி
படிப்பு கழுகுமலை , பாளையங்கோட்டை

மு.தனகோபாலன்

மன்னார்குடியைச் சேர்ந்தவர். மருந்தாளுநராகப் பணியாற்றியதாக நினைவு.

வயலுார் இரா.பார்த்திபன்

முந்தைய வட ஆற்காடு மாவட்டம் வெடால் என்ற ஊரில் கிராம நிர்வாக அலுவலராகப் பணியாற்றிக் கொண்டிருந்த இவரை நண்பர் திரு நம்பி (கிளை அஞ்சலக அதிகாரி) அறிமுகம் செய்து வைத்தார்.
வருவாய் ஆய்வாளராகப் பதவி வகித்து ஓய்வு பெற்றவர்.பல்வேறு இதழ்களில் பல துணுக்குகளை எழுதி இருக்கிறார். திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டை அடுத்த வயலுார் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர்.

கடுவை கோபால்சாமி

நகைச்சுவை மிக்க எழுத்தாளர்.
கீழை ஆ. கதிர்வேல் அவர்களுக்குச் சகோதரர் முறை.
திடீர் உடல் நலக்குறைவால் முத்துப்பேட்டை அலையாற்றிக் காடுகளுக்குச் சிற்றுலா சென்ற போது அமரராகிவிட்டவர்.

ஆங்கரை பைரவி

கேள்விப்பட்ட பெயர்.
முகநுால் தொடர்பு.
இலால்குடியை அடுத்த ஆங்கரை இவரது ஊர்.
ஒப்பந்த அடிப்படையில் பணி செய்து வருகிறார்.

கீழை ஆ. கதிர்வேல்

நீண்ட காலத்தி்ற்கு முன்பே கேள்விப்பட்ட பெயர்.
சிங்கப்பூரில் இருக்கிறார்.
தமிழகம் வந்திருப்பதாக முகநுால் மூலம் அறிந்து தொடர்பு கொண்டோம்.
நகைச்சுவை எழுத்தாளர்களாக வரவிரும்புபவர்களுக்குப் பல பயனுள்ள யோசனைகளை அளிக்கிறார்.
பல ஆண்டுகளுக்கு முன்பே தமது நகைச்சுவைத் துணுக்குகளைத் தொகுத்து வெளியிட்டிருக்கிறார். பதிப்பகத்தாருக்குத் தம்மை அறிமுகம் செய்து வைத்த நண்பர் எடையூர் சிவமதியை எப்போதும் நன்றியுடன் புகழ்கிறார்.

புதுவண்டி ரவீந்திரன்

தினமணி கதிரில் இவரது சிரிப்புத் துணுக்குகளைப் படித்த நினைவு உண்டு.
புதுவண்டிப் பாளையம் என்ற ஊர்க்காரர் என்பதால் பெயரில் புதுவண்டியை இணைத்துக் கொண்டவர்.
பொறியாளர். பல வெளிநாடுகளில் பணியாற்றி இருக்கிறார்.
முகநுால் மூலம் அறிமுகத்தைப் புதுப்பித்துக் கொண்டோம். இவருடனான இணைய உரையாடலின்போதே இந்த வலைப்பூவிற்கான வடிவம் உருப்பெற்றது.

எடையூர் சிவமதி

30.06.2013
எடையூர் சிவமதி
அதிக எண்ணிக்கையிலான துணுக்குகளில் இவரது பெயரைப் பார்த்த நினைவு இருக்கிறது.
பல முறை நேரில் பார்த்துப் பேச முயற்சித்தும் முடியவில்லை. அதே எடையூருக்கு இரண்டு முறை சென்றிருந்தபோதும் வாய்ப்புக் கிட்டவில்லை.
கீழைஆ. கதிர்வேல் அவர்களின் அறிமுகத்திற்குப் பிறகு இவரைத் தொடர்பு கொள்ள முடிந்தது.
நேரில் சந்தித்து நீண்ட நேரம் அளவளாவிக் கொண்டிருந்தோம்.
ஆன்மீக நுால்கள் அதிகம் எழுதுகிறார். சுரா பதிப்பகம் இவருடைய பல படைப்புகளை வெளியிட்டு்ள்ளது.